https://suruthy.blogspot.com/

என்னால் முடிந்த நல்லவற்றை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு இந்த பிளாகரை ஆரம்பிக்கின்றேன். தொடர்புகளுக்கு Facebook-anokaran,மொபைல்0778705960

www.suruthy.blogspot.com

Thursday, November 14, 2019

உங்களுக்கு பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும் கண்டறிய இணையம்

எல்லோருக்கும் எதிர்காலம் பற்றி அறிய ஆசை அதனால் தான் ஜாதகத்தை எடுத்துகொண்டு ஜோதிடர் வாசலை தட்டுகிறோம் . தங்களுக்கு பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும் என்று நானறிந்தவரை எந்த ஜோதிடரும் சொல்லியதில்லை உங்களின் குழந்தையின் குணத்தினை வேண்டுமானால் ஜோதிடர் சொல்லலாம் . பிறக்க போகும் குழந்தை ஆனா பெண்ணா வைத்தியர் சொல்லலாம் இதோ இந்த இணையம் தருகிறது உங்களுக்கு பிறக்கும் குழந்தையின் முக தோற்றத்தை .


இதற்கு உங்களின் புகைப்படமும் உங்கள் மனைவி அல்லது கணவன் புகைப்படமும் அல்லது காதலர்கள் ஆயின் காதலர்கள் இருவரின் புகைப்படங்களை இந்த தளத்தில் கொடுத்து உங்களின் எதிர்கால வாரிசின்  அழகிய தோற்றத்தை காணலாம் .



முதலில் தளத்தில் சென்று உங்களின் படங்களை ஒவ்வொன்றாக UPLOAD  செய்யுங்கள் படத்தின் முகத்தினை மட்டும் தளத்தில் தெரிவு செய்யுங்கள் .

பின்னர் உங்கள் குழந்தைக்கு நீங்கள் சூட்ட விரும்பும் பெயரை குறிப்பிட்டு நிறத்தினையும் குறிப்பிட்டு PROCEED  என்பதை கிளிக் செய்தால் போதும் . உங்கள் குழந்தயின் தோற்றத்தை காணலாம்.

 தள முகவரி  இங்கே 

உங்கள் குழந்தையின் தோற்றத்தை கண்டதும் கடுப்பாகி கமெண்ட் பண்ணாதிங்கப்பா.
இது ஒரு வேடிக்கையான தளம்  நண்பர்களே! சில வேளைகளில் சரியாகவும் வரும் முயற்சி செய்து பாருங்களேன்;


நன்றி அன்புடன்

Monday, June 24, 2019

இணையத்தில் தமிழ் மின்னூல்கள் பயனுள்ள பக்கங்கள்

ஈழத்து மின்னூல்கள்

ஈழத்து எழுத்தாவணங்களை அடுத்த தலைமுறையினரின் பயன்பாட்டிற்கு கிடைக்கக் கூடியதாக எடுத்துச்செல்ல வேண்டும் எனும் நோக்கில், தன்னார்வலர்களின் கூட்டுழைப்பால், ஈழத்து நூல்கள் மின்னூல்களாக (E- Book) "நூலகம்" தளத்தில் பதிவேற்றி வைக்கப்படுகின்றன.

Friday, January 11, 2019

மொபைல் போன்களை வைத்தே Document களை ஸ்கான் செய்யலாம் PDFஆக மாற்றலாம்/ android mobile scanner

நாங்கள் இதுவரைக்கும் கணிணி பற்றியே பாா்த்துக் கொண்டிருக்கின்றோம் ஆனால் இப்போது யாரும் கணிணியை விட மொபைல் சாதனங்களையே பாவிப்பது அதிகமாகிக் கொண்டிருக்கின்றது.

எதற்கெடுத்தாலும்  Android மொபைல் பாவிக்கும் நாங்கள் அதில் செய்யக் கூடிய பலவற்றை அறியாமல் இருக்கத்தான் செய்கின்றது.

Thursday, August 10, 2017

Drop Box பயன்படுத்துவது எப்படி ?



Simplify Your Life



Dropbox என்றால் என்ன ? இதனை நாம் நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்வதால் நமக்கு என்ன பயன் ? இதனை நாம் நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது எப்படி ? என்பதை பற்றி நாம் இந்த பாடத்தில் தெளிவாக பார்ப்போம்.....

ஆரம்ப காலத்தில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் தங்களுடைய Personal File களை கம்ப்யூட்டரில் சேமித்து வைத்து பயன்படுத்தும்பொழுது அந்த பைல்களை இன்னொரு காப்பி எடுத்து வைத்துக்கொண்டு தேவையான நேரங்களில் தம் கம்ப்யூட்டரிலோ அல்லது  வேறு கம்ப்யூட்டரிலோ பயன்படுத்துவதற்கு Floppy Disk என்ற ஒன்றை பயன்படுத்தினார்கள். 

                                                                                                                    Floppy Disk ( 1.44 MB Capacity )
                        
இந்த Floppy Disk ன் மொத்த அளவு எவ்வளவு தெரியுமா ? 1.44 MB மட்டும் தான். இந்த 1.44 MB அளவில் தான் நாம் நம் பைல்களை சேமிக்க முடியும். 2 MB அளவில் உள்ள ஒரு பைலை நாம் இந்த Floppy ல் சேமிக்க முடியாது. அப்படி என்னதான் இதில் நாம் சேமிப்பது ? Windows 95 மற்றும் 98 பயன்படுத்தும் காலத்தில் நாம் சேமிக்க நினைப்பது ஆடியோ அல்லது வீடியோ பைல்களை அல்ல. Microsoft Excel மற்றும் Word File களை மட்டும்தான். இந்த மைக்ரோசாப்ட் ஆபீஸ் பைல்கள் ஒவ்வொன்றும் 50 KB, 200 KB, 300 KB என்ற அளவில்தான் இருக்கும். இந்த பைல்களில் 10 அல்லது 15 பைல்களை நாம் இந்த ஒரு Floppy Disk ல் மொத்தமாக சேமித்து வைத்து Backup Disk ஆக இதனை பயன்படுத்திக்கொள்வோம்.

அப்படி இருந்த காலம் மாறிப்போய் இப்பொழுது USB Pen Drive பயன்படுத்தும் காலம் வந்துவிட்டது.

Saturday, August 5, 2017

கம்ப்யூட்டரில் Plug-ins என்றால் என்ன ? அதன் பயன்கள் என்ன ?






கம்ப்யூட்டரில் பயன்படும் Plug-ins என்றால் என்ன ? இதன் பயன்கள் என்ன ?

தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் தளங்களுக்கு வரும் அதிகமான நண்பர்கள் கேட்க்கும் கேள்விகளில் இதுவும் ஒன்று.

பொதுவாக Plug-ins என்பதன் அர்த்தம் ஒன்றுடன் தன்னை இணைத்துக்கொள்வது. தன்னிச்சையாக செயல்படும் திறம் அற்றது.  அதாவது இந்த Plug-in களை மட்டும் வைத்து நீங்கள் தனியாக பயன் அடைய முடியாது. நாம் பயன்படுத்தும் ஒரு பொருளுக்கு கூடுதலாக சக்தியை கொடுப்பதற்கு இதனை நாம் பயன்படுத்த முடியும்.

Tuesday, August 1, 2017

ஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி?


உங்கள் கணினியை வேறு எவருக்கேனும் விற்பனை செய்யும் போது கணினியில் உள்ள கோப்புகளை சுத்தமாக அழித்து விட்டு கொடுப்பீர்கள். அழிக்கும் போது Shift + Delete பயன்படுத்தினால் சுத்தமாக அழிந்துவிடும் என்று நினைத்து அழிப்பார்கள்.

Friday, July 28, 2017

உங்கள் கம்ப்யூட்டரை பற்றி உங்களுக்கு தெரியுமா ?



புதிதாக கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்காக
உங்களுக்கு தெரியுமா உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள RAM இன் வேகம் மற்றும் உங்கள் கம்யூட்டரின் MotherBoard, Processor ன் பெயர்கள் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் சாப்ட்வேர் (விண்டோஸ் எக்ஸ்பி) பெயர் ஆகியவை எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது என்று ?