என்னால் முடிந்த நல்லவற்றை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு இந்த பிளாகரை ஆரம்பிக்கின்றேன். தொடர்புகளுக்கு Facebook-anokaran,மொபைல்0778705960

www.suruthy.blogspot.com

Wednesday, May 5, 2010

கோப்பாய்

கோப்பாய் யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமப் பிரிவில் உள்ள கோப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு ஊராகும். இது கோப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவின் தலைமை இடமாகவும் உள்ளது. யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் யாழ்ப்பாண நகரில் இருந்து சுமார் 4 மைல்கள் தொலைவில் இவ்வூர் உள்ளது.
இவ்வூரின் வடக்கு எல்லையில் நீர்வேலியும், மேற்கு எல்லையில் உரும்பிராயும், தெற்கு எல்லையில் இருபாலையும் உள்ளன. கடலேரி கிழக்கு எல்லையாக அமைந்துள்ளது. மானிப்பாயில் இருந்து தென்மராட்சியில் உள்ள கைதடி என்னும் ஊருக்குக் இவ்வூரினூடாகச் செல்லும் வீதி பருத்தித்துறை வீதியை வெட்டிச் செல்லும் இடம் கோப்பாய்ச் சந்தி என அழைக்கப்படுகின்றது. கோப்பாயின் வணிகப் பகுதி இச் சந்தியை அண்டியே காணப்படுகின்றது.

யாழ்ப்பாண அரசுக் காலத் தலைநகரமான நல்லூருக்கு சிறு தொலைவில் உள்ள இவ்வூரில், யாழ்ப்பாண மன்னர் கோட்டையொன்றை அமைத்திருந்தனர்.


அத்துடன் கோ என்பது அரசனையும் பாய் - பாய்ந்து வந்து ஒளித்திருந்தாகவும் அதற்கு முன்னோர் பொருள் கொடுக்கின்றனர். அதிகம் பாமரமக்களும் சைவ சமயத்தினரும் படித்த பட்டம் பெற்ற பெரியோர்களும் வாழும் சிறந்த ஊர் கோப்பாய் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி
அனோ.

No comments: