என்னால் முடிந்த நல்லவற்றை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு இந்த பிளாகரை ஆரம்பிக்கின்றேன். தொடர்புகளுக்கு Facebook-anokaran,மொபைல்0778705960

www.suruthy.blogspot.com

Friday, May 14, 2010

Google Books என்னும் சேவையிலிருந்து நூல்களை PDF ஆக தரவிறக்குவதற்கான (Download) இலவச மென்பொருள்:

எமக்கு தேவையான நூல்களை அதுவும் இலவசமாக பெறுவது என்பது சிரமமான விடயம். அத்தகைய பெரும்பாலான நூல்களை பெற்றுக்கொள்ளவென Google இன் அரியதொரு சேவையுள்ளது. books.google.com இதில் உங்களுக்கு தேவையான புத்தகங்களை தேடி பெற்றுக்கொள்ள முடியும் . ஆனால் அவற்றை PDF வடிவில் தரவிறக்குவது(Download) என்பது கடினம்(சில PDF ஆக தரவிறக்கும் வசதி உள்ளது ) அவ்வாறான நூல்களை தரவிறக்கவென ஒரு மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது.

Melon Google Books Downloader என்னும் மென்பொருள் உள்ளது. இது ஒரு இலவச மென்பொருள் என்பதும் குறிப்பிடத்தக்க விடயம்.

இந்த மென்பொருளை கணனியில் நிறுவ முதல் Microsoft .net Framework 3.5 SP1 என்னும் மென்பொருள் ஆனது உங்கள் கணனியில் முதலில் நிருவபட்டிருக்க வேண்டும்


(Microsoft .net Framework 3.5 SP1 என்னும் மென்பொருளை நீங்கள் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.)



Microsoft .net Framework 3.5 SP1 என்னும் மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவியதன் பின்னர் Melon Google Books Downloader என்னும் மென்பொருளை திறந்து அதில் அந்த நூலுக்குரிய இணையதள இணைப்பை வழங்குங்கள்.


Microsoft .NET Framework 3.5 SP1 என்னும் மென்பொருளை தரவிறக்குவதற்கான இணையத்தளச்சுட்டி.

Microsoft .NET Framework 3.5 SP1 என்னும் இணைப்பில் அழுத்துங்கள்.

Melon Google Books Downloader மென்பொருளை தரவிறக்குவதற்கான சுட்டி:

Melon Google Books Downloader இந்த இணைப்பில் அழுத்துங்கள்.


இதோ Melon Google Books Downloader இலிருந்து புத்தகங்களை தரவிறக்குவதற்கான வழிகாட்டி (Guide):
1.Melon Google Books Downloader ஐ திறவுங்கள்.(open Melon Google Books Downloader))



2.File ஐ தெரிவுசெய்து Add book என்பதினை அழுத்துங்கள்.


3.பின்னர் தோன்றும் menu இல் url ஐ இடுங்கள்.


4. தரவிறக்க வேண்டிய நூலினை தெரிவுசெய்து Queue என்பதினை அழுத்துங்கள்

No comments: