ஆடியோ மற்றும் வீடியோக்களை கன்வெர்ட் செய்ய இணையத்தில் பல்வேறு விதமான மென்பொருள்கள் கிடைக்கிறன. நானே என்னுடைய வலைப்பூவில் ஆடியோ மற்றும் வீடியோக்களை கன்வெர்ட் செய்ய பல்வேறு விதமான இலவச மென்பொருள்களை உங்களுடன் பகிர்ந்து இருக்கிறேன். இதோ மீண்டும் ஒரு இலவச மென்பொருள், இந்த மென்பொருளின் உதவியுடன் ஆடியோ மற்றும் வீடியோக்களை கன்வெர்ட் செய்வது மட்டுமல்லாமல் கட் செய்தும் கொள்ள முடியும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். நாம் ஆடியோவை கன்வெர்ட் செய்ய வேண்டுமெனில் அதற்கென தனிமென்பொருளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். வீடியோவை கன்வெர்ட் செய்ய வேண்டுமெனில் அதற்கொரு மென்பொருள் என ஒவ்வொரு பணிகளையும் செய்ய தனித்தனி மென்பொருளை நாட வேண்டிவரும். இந்த இரண்டு பணிகளையும் ஒரே மென்பொருளின் உதவியுடன் செய்து கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் போட்டோக்களை கொண்டு Slide Show யும் உருவாக்கி கொள்ள முடியும்.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் வீடியோ மற்றும் ஆடியோவை உங்கள் விருப்பபடி கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். கன்வெர்ட் செய்வது மட்டுமல்லாமல் கட் மற்றும் ஜாயினும் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளில் நாம் avi, mpg, tod, mov, dv, rm,3gp, 3g2, 3gp2,flv, swf, mp4,wmv, mkv, qt, ts, mts போன்ற வீடியோ பைல்களை உள்ளினைத்து கன்வெர்ட் செய்து கொள்ள முடியும்.
இந்த மென்பொருளில் இருந்தவாறே டிவீடி ரைட்டிங்கும் செய்து கொள்ள முடியும். இதனால் இந்த மென்பொருளை சிறந்ததொரு மென்பொருள் என்று கூறமுடியும்.
இந்த மென்பொருளின் உதவியுடன் படத்தில் குறிப்பிட்டுள்ள பைல் பார்மெட்களில் கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளானது வீடியோ, ஆடியோ , மற்றும் போட்டோக்களை கன்வெர்ட் செய்வது மட்டுமல்லாமல் எடிட்டிங்கும் செய்து கொள்ள முடியும். நாம் இந்த மென்பொருளில் கன்வெர்ட் செய்யும் பைல்களை நேரிடையாக டிவீடிக்களில் ரைட்டிங் செய்து கொள்ள முடியும். Youtube வீடியோ URL யை உள்ளிட்டு வீடியோவை கன்வெர்ட் செய்து கொள்ளும் வசதியும் இந்த மென்பொருளில் உள்ளது. DVD க்களை உள்ளிட்டு அதில் உள்ள வீடியோ மற்றும் ஆடியோவையும் இந்த மென்பொருளின் துணையுடன் கன்வெர்ட் மற்றும் எடிட்டிங் செய்து கொள்ள முடியும். மொத்ததில் இந்த மென்பொருளை கொண்டு ஆடியோ, வீடியோவை மிக எளிதாக கன்வெர்ட் செய்யவும் எடிட் செய்யவும் இந்த மென்பொருளானது சிறந்ததாகும். இனி ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனி மென்பொருளை நாடிச்செல்வதை விட்டுவிட்டு ஒரே மென்பொருளின் துணையுடன் அனைத்து பணிகளையும் செய்ய முடியும்.
நன்றி தமிழ்
T.Ano
No comments:
Post a Comment