என்னால் முடிந்த நல்லவற்றை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு இந்த பிளாகரை ஆரம்பிக்கின்றேன். தொடர்புகளுக்கு Facebook-anokaran,மொபைல்0778705960

www.suruthy.blogspot.com

Saturday, May 14, 2011

உங்கள் கணணியின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு



கணணி என்பது இப்பொழுது அனைவருக்கும் ஒரு இன்றியமையாத ஒரு சாதனமாக ஆகிவிட்டது. சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை அவர்களின் வேலைகளை சுலபமாக்குவதற்கு கணணி பயன்படுகிறது.கணணி உபயோகிக்கும் பலருக்கு அந்த கணணியின் சில அடிப்படை விடயங்கள் கூட தெரியாது என்பது உண்மையாகும். ஆகவே நம் கணணி பழுதானால் சர்வீஸ் இன்ஜினியர் என்ன சொன்னாலும் அதுக்கு தலையை ஆட்டிவிட்டு அவன் கேட்கிற தொகையை கொடுத்துடுவோம்.
அவனும் தன் விருப்பத்திற்கு ஏற்ப ஏதாவது ஒரு பொய் சொல்லி காசை கறந்து விடுவான். ஆகவே இன்றைய சூழ்நிலையில் கணணியை பற்றி சில அடிப்படை விடயங்களையாவது தெரிந்து வைத்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

இவைகளை எல்லாவற்றையும் ஒரே இடத்தில் சுலபமாக அறிந்து கொள்ள ஒரு சூப்பர் இலவச மென்பொருள் உள்ளது.
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். தரவிறக்கம் முடிந்ததும் இந்த மென்பொருளை நேரடியாக இயக்குங்கள். உங்களுக்கு வரும் விண்டோவில் உங்கள் கணணியின் அனைத்து விவரங்களும் வரும்.
தரவிறக்க சுட்டி
இந்த மென்பொருளினால் கணணியை பற்றி அதிக தகவல்களை ஒரே இடத்தில் அறிந்து கொள்ளலாம். இதில் உள்ள இன்னொரு வசதி இந்த விவரங்களை Picture, HTML கோப்புகளாக உங்கள் கணணியில் சேமித்து கொள்ளலாம்.
பிரிண்ட் எடுத்தல், மின்னஞ்சல் அனுப்புதல் போன்ற முக்கியமான வசதிகளும் இதில் உள்ளது. இந்த மென்பொருளை உங்கள் கணணியில் நிறுவாமல் நேரடியாக இயக்கலாம். இதில் நம்முடைய கீபோர்டில் Numlock, Capslock, Scroll Lock போன்ற கீகள் செயலில் இருக்கிறதா இல்லையா என்று கூட தெரியும்.


நன்றி அன்புடன் T.அனோ

1 comment:

மதுரை சரவணன் said...

நன்றீ..வாழ்த்துக்கள்