என்னால் முடிந்த நல்லவற்றை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு இந்த பிளாகரை ஆரம்பிக்கின்றேன். தொடர்புகளுக்கு Facebook-anokaran,மொபைல்0778705960

www.suruthy.blogspot.com

Saturday, July 16, 2011

ப்ளீச் பிட் கீளினர் மற்றும் உங்கள் கண்ணை பாதுகாக்க எளிய மென்பொருள்

நண்பர்களே நம் கணினியில் உள்ள தேவையற்ற கோப்புகளை நீக்க நிறைய முறைகளை பின்பற்றுவோம்.  அதில் ஒன்று சிசி கீளினர் உபயோகப்படுத்துவது.  இன்னொரு முறை நாமளே நீக்குவது தேவையில்லாத டெம்பரவரி கோப்புகள், இண்டெர்நெட் குக்கீகள் போன்றவற்றை நாமளே நீக்குவது.  நாமளே நீக்குவது என்பது மிகவும் சிரமமான விஷயம் என்பதால்தான் சிசிகீளினர் போன்ற மென்பொருட்கள் வந்து நம் கணினியின் பளுச்சுமையை குறைத்துள்ளது. 

சிசி கிளீனர் போன்ற ஒரு மென்பொருள்தான் ப்ளீச் பிட் Bleach Bit

இந்த மென்பொருள் ஒரு திறந்த நிலை மென்பொருள் என்பதால் இன்னும் நிறைய பேர் இதை மேம்படுத்துவார்கள் என்று கட்டாயம் நம்பலாம்.

இந்த மென்பொருள் 90க்கும் மேற்பட்ட அப்ளிகேசன்களை ஆதரிக்கிறது.

இந்த மென்பொருள் போர்ட்டபிள் மற்றும் கணினியில் நிறுவக்கூடிய வகையில் கிடைக்கிறது.

இந்த மென்பொருள் விண்டோஸ் அனைத்து வெர்சன்கள் மற்றும் லினக்ஸ் ஆதரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

Bleach Bit Installer Download Link

Bleach Bit Portable Download Link


Bleach Bit Linux Download Link


கணினியில் தொடர்ச்சியாக வேலை செய்யும் நண்பர்கள் சிறிது நேரம் கூட ஓய்வு இல்லாமல் வேலை செய்வார்கள்.  இது போல் தொடர்ச்சியாக வேலை செய்பவர்களுக்கு சிறிது நேரம் ஒய்வு எடுக்க ஞாபகமூட்டும் ஒரு சிறு மென்பொருள் இது.  இந்த மென்பொருளை நிறுவி விட்டு இவ்வளவு நேரத்திற்கு நினைவூட்டுமாறு நேரத்தினை செட் செய்து கொண்டால் போதுமானது.  எந்த கலர் வேண்டுமோ அந்த கலர் செட் செய்து கொண்டால் நீங்கள் செட் செய்த நேரத்திற்கு நேரத்துடன் நீங்கள் செட் செய்த வண்ணமும் உங்கள் கணினி மாறி  உங்களை ஓய்வு எடுக்க சொல்லி நினைவூட்டும்.  இந்த மென்பொருளின் பெயர் ஃபேட் டாப் Fade Top



Fade Top Installer Download Link  452கேபி மட்டுமே

Fade Top Portable Download Link 190கேபி மட்டுமே

நன்றி
அன்புடன் T.அனோ

No comments: