என்னால் முடிந்த நல்லவற்றை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு இந்த பிளாகரை ஆரம்பிக்கின்றேன். தொடர்புகளுக்கு Facebook-anokaran,மொபைல்0778705960

www.suruthy.blogspot.com

Tuesday, July 10, 2012

செவ்வாய் கிரகம் எப்படியிருக்கு தெரியுமா.. – நாசா வெளியிட்டுள்ள புதிய படம்!

 
செவ்வாய் கிரகம் எப்படியிருக்கு தெரியுமா.. – நாசா வெளியிட்டுள்ள புதிய படம்!

செவ்வாய் கிரகம் எப்படியிருக்கும்… செக்கச் செவேலென இருக்குமோ… ஒரே சிவப்பு புகையா இருக்குமாமே…
இப்படி அனுமானங்களால் நிறைந்திருந்த செவ்வாய் பற்றி சந்தேகங்களுக்கு அந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா பளிச்சென்று பதில் தந்துள்ளது.

அத்துடன் செவ்வாய் கிரகம் தொடர்பான இரு புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில் செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதிகள், பூமியில் மனித வாசனையற்ற இடங்கள் எப்படியிருக்குமோ… அப்படி அழகாகக் காட்சி தருகின்றன.
ஞாயிற்றுக்கிழமை இந்தப் படங்கள் இரண்டும் வெளியிடப்பட்டன. கிரீலே பனோரமா என்று இதற்குப் பெயரிட்டுள்ளது நாசா. இந்தப் படங்கள் நாசா அனுப்பியுள்ள Mars Exploration Rover Opportunity என்ற விண்கலத்தின் மூலம் எடுக்கப்பட்டது.
இந்த விண்கலத்தின் மீது பொருத்தப்பட்ட பான்கேம் எனப்படும் பானரோமிக் கேமரா மூலம் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 817 புகைப்படங்களை இந்த கேமரா எடுத்துத் தள்ளியுள்ளது.
செவ்வாய் கிரகத்தின் வின்டர் சீசனின்போது இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ரோவர் விண்கலத்தைச் சுற்றிலும் உள்ள செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதி முழுவதும் இதில் காட்சியாகியுள்ளது.

நான்கு மாதங்கள் அந்த இடத்தில் ரோவர் விண்கலம் நிலை நிறுத்தப்பட்டிருந்தது. அதாவது 2011ம் ஆண்டு டிசம்பர் 21 முதல் 2012 மே 8ம் தேதி வரை இங்கு ரோவர் விண்கலம் நிலை நின்றிருந்தது.
ஒரு புகைப்படத்தில் செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதி முழுமையாக தெரிகிறது. 2வது படத்தில் செவ்வாய் கிரகத்தின் கிரேட்டர் அழகாக காணப்படுகிறது. இந்த கிரேட்டரானது 14 மைல்கள் அதாவது 22 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டதாகும்.
கடந்த 2004ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் முறையாக செவ்வாய் கிரகத்திற்குச் சென்று ரோவர் விண்கலம்.
அன்று முதல் இதுவரை செவ்வாய் கிரகத்தில் 34.4 கிலோமீட்டர் தூரம் வரை அது பயணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


படங்கள்: நாசா


நன்றி அன்புடன்

No comments: