என்னால் முடிந்த நல்லவற்றை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு இந்த பிளாகரை ஆரம்பிக்கின்றேன். தொடர்புகளுக்கு Facebook-anokaran,மொபைல்0778705960

www.suruthy.blogspot.com

Saturday, February 2, 2013

விஞ்ஞானரீதியாக பயன்படுத்தத்தக்கவகையிலே உருவாக்கப்பட்டுள்ள இலவச கணிப்பொறி(Calculator) மென்பொருள்


கணிப்பொறிகள்(Calculators) கணனிகளுக்கு முற்பட்ட காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. கணிப்பொறிகளின் அடுத்த தலைமுறையாகத்தான் கணனிகள் கருதப்படுகின்றன. அத்தகைய கணிப்பொறிகள் இன்று கணனியில் பயன்படுத்தக்கூடிய விதத்தில் மென்பொருளாக வெளிவருகின்றன. அவ்வாறானதொரு கணிப்பொறி மென்பொருள் RedCrab.
RedCrab எனப்படும் இந்த இலவச மென்பொருளானது விஞ்ஞானரீதியாக பயன்படுத்தக்கூடிய விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவவேண்டிய(Installation) அவசியம் இல்லை. இந்த மென்பொருளை பயன்படுத்தி நீங்கள் வழங்கும் தரவுகளுக்கு ஏற்ற முறையிலே வரைபுகளையும் தயரித்துக்கொள்ளமுடியும். மிகவும் பயனுள்ளதொரு மென்பொருள். 
தரவிறக்கச் சுட்டி: RedCrab

நன்றி  தகவல் தொழில்நுட்பப் பூங்கா



நன்றி அன்புடன்

1 comment:

Anonymous said...

arumayana pathivu
thank you