என்னால் முடிந்த நல்லவற்றை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு இந்த பிளாகரை ஆரம்பிக்கின்றேன். தொடர்புகளுக்கு Facebook-anokaran,மொபைல்0778705960

www.suruthy.blogspot.com

Monday, January 13, 2014

நாம் இதுவரை பயன்படுத்தாத மென்பொருள்

 இது அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு அத்தியாவசியமான விஷயம். உங்கள் கணினி சீராக இயங்க வேண்டுமென்றால் உங்களுடைய கணினிக்கு சமச்சீரான தட்பவெப்ப நிலை இருக்க வேண்டும். நீங்கள் கணினியில் அதிக நேரம் பயன்படுத்தி வந்தால் உங்களுடைய கணினியில் உள்ள Hardisk, Processor மற்றும் Motherboard கள் விரைவில் 


வெப்பமாகிவிடும். இதனால் உங்களுடைய கணினியின் ஆயுட்காலமும்வெகுவாக குறைகின்றது. உதாரணமாக 5 வருடம் வரை இயங்கும் தன்மையுள்ள வன்பொருட்கள் 4 ஆண்டுகள் வரையே இயங்கும். இதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. இந்த வெப்பத்தை குறைக்க நம் கணினியில் Processor/Motherboard Cooling Fan பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இதில் முழு பயனை நாம் அடைவதில்லை.

Speed Fan என்கிற இந்த சிறிய இலவச மென்பொருளைக் கொண்டு உங்களுடைய கணினியின் Temperature ஐ அறிந்துகொள்ளலாம். இதனால் உங்களுடைய கணினி இருக்கும் அறையின் வெப்ப அளவை குறைக்க நீங்கள் வழி வகுக்கலாம். அது மட்டுமின்றி இந்த மென்பொருள் நேரடியாக உங்களுடைய கணினியை கையாளும் திறன் உள்ளதால் உங்களுடைய கணினியை இது கண்காணித்து உங்களுக்கு தெரிவிக்கிறது. பல மணி நேரம் கணினியை பயன்படுத்துபவர்களுக்கு தேவையான ஒரு அவசிய மென்பொருள். இந்த Speed Fan மென்பொருளை பதிவிறக்க இந்த சுட்டியை கிளிக் செய்யுங்கள்.


நன்றி அன்புடன்

No comments: