என்னால் முடிந்த நல்லவற்றை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு இந்த பிளாகரை ஆரம்பிக்கின்றேன். தொடர்புகளுக்கு Facebook-anokaran,மொபைல்0778705960

www.suruthy.blogspot.com

Saturday, September 20, 2014

MS Officeஐ இனி Android கைபேசிகளிலும் பயன்படுத்தலாம்.


இணையத்தில் இருக்கும் பலருக்கும் Microsoft / Windows ஐ தூற்றி பதிவுகள் எழுதுவது சக்கரை சாப்பிடுவது போல் இருக்கும். ஆனால் அவர்களுள் பலரும் தங்களின் தின பணிகளை முழுமையாக Linux / Mac இல் செய்வது இல்லை. இன்றும் பல கணினி விளையாட்டுக்களை விளையாட Windows கணினி அவசியம்.

Open Office போன்ற இலவச Office மென்பொருள் இருந்தாலும் பலருக்கும் MS Office இல் உள்ள வசதிகள் தான் முதன்மையாக உள்ளது. வணிக நிறுவனங்கள் பலவும் Office 360  எனும் கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் office சேவையை வாங்குகின்றனர்.
ஆஃபீஸ் 360 வாடிக்கையாளர்களுக்காக., iPhone மற்றும் அண்ட்ராய்டு கைபேசிகளில் Word, Excel, Power Point கோப்புகளை பார்க்கவும், புதிதாக உருவாக்கவும் அவற்றிற்க்கான மென்பொருளை Microsoft நிறுவனம் இந்த வாரம் அறிமுகம் செய்துள்ளது.
Office மென்பொருளை பணம் கட்டி பயன்படுத்தும் வணிக வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய வசதி  “குடுத்த காசுக்கு மேல கூவுறான்” என Microsoft ஐ பார்த்து கேட்கும் அளவிற்கு தமது வாடிக்கையாளர்களுக்கு வலிந்து சேவை செய்கிறது Microsoft.
நன்றி அன்புடன்

No comments: