போட்டோசாப்பில் சில வடிவ தூரிகைகள் மட்டும் கொடுத்து இருப்பார்கள்.ஆனால் விளம்பரம் மற்றும் திரைத்துறை வடிவமைப்பில் வரும் வடிவமைப்புகள் நம்மை பிரமிக்க வைத்து இருக்கும்.
நான் மாதிரி தூரிகைகளின் படத்தை தந்துள்ளேன். இது போல ஆயிரமாயிரம் தூரிகைகள் கிடைக்கும். ஒரே சொடுக்கில் ஒரு ஓவியத்தை படைக்க தூரிகைகளை சில வளைத்தளங்கள் இலவசமாக கொடுக்கிறார்கள்.இதை பதிவிரக்கம் செய்து நாம் பயன் படுத்த வேண்டியதுதான். சில முகவரிகளை தந்துள்ளேன். |
பதிவிரக்கம் செய்த தூரிகைகளை எப்படி போட்டோசாப்பில் இணைப்பது பற்றி பார்ப்போம்.போட்டோசாப்பினுல் சென்று பிரஷ் கருவிக்குச் செல்லுங்கள்.படத்தி காட்டியுள்ளபடி முக்கோண அய்க்கானை சொடுக்க தோன்றும் பட்டையில் Load brush.. என்ற தேர்வை கிளிக் செய்து தூரிகை யுள்ள கோப்பில் இருந்து பதிவேற்றுங்கள்.பெரும்பாலும் ஜிப் வடிவத்தில் தான் சுருக்கிக் கொடுப்பார்கள்.விரித்து பிரஷ் தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.FlowerXXXXXXXX .abr என்ற எக்ஸ்டன்சன் வடிவில் இக்கோப்பு கிடைக்கும்.தூரிகை உங்கள் வசமாகட்டும். |
No comments:
Post a Comment