என்னால் முடிந்த நல்லவற்றை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு இந்த பிளாகரை ஆரம்பிக்கின்றேன். தொடர்புகளுக்கு Facebook-anokaran,மொபைல்0778705960

www.suruthy.blogspot.com

Tuesday, August 25, 2015

வரவு செலவு கணக்குகளை கையாள இலவச அக்கவுண்டிங் மென்பொருள் வணக்கம் நண்பர்களே..!




இன்றைய காலகட்டத்தில் வரவு செலவு கணக்குகளை பார்ப்பது என்பது மிகவும் அவசியமானதொன்றாகும். கடுமையான விலையேற்றத்தில் பட்ஜெட் போட்டு செலவு செய்தாலே மாத இறுதியில் தடுமாற வைத்திடும் பொருளாதார சூழ்நிலைதான் இப்போது. அதுவும் மிடில்கிளாஸ் பேமலி என்றாலே இன்னும் கூடுதல் சிரமத்திற்கு ஆளாவார்கள்.
இவற்றையெல்லாம் கணக்கிட்டு செலவு செய்து, மாத இறுதியில் மிச்சம் பிடித்தால்தான் எதிர்காலத்தில் ஏதாவது நல்ல காரியங்களை செய்து முடிக்க அது உதவும். சரி. சொந்த கதை சோக கதையை விட்டுவிட்டுவிடுவோம். இதுபோன்று மிடில் கிளாஸ் பேமலியில் உள்ளவர்கள் ஒரு சிறிய நிறுவனத்தை தொடங்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அந்நிறுவனத்திற்குரிய வரவு செலவு கணக்குகளைப் பார்க்க வேண்டும். அதற்கான் மென்பொருளை விலைகொடுத்து வாங்க முடியாத சூழ்நிலை. என்ன செய்வது? இதற்கான வழிமுறைகளை அமைத்துக்கொடுக்கிறது இந்த இலவச மென்பொருள். இம்மென்பொருளைப் பயன்படுத்திய உங்கள் வரவு செலவு கணக்குகளைப் பார்க்கலாம். அனைத்து வகையான Accounting கணக்குகளையும் இதன்மூலம் செய்து பயன்பெறலாம்.
       சுட்டியைக் கிளிக் செய்து Free Accounting Software நிறுவிக்கொள்ளுங்கள். 1. Money In 2. Invoice 3. balance sheet 4. Tax 5. Ledger 6. Profit & Loss போன்ற பயன்பாடுகளை ஒரே இடத்தில் இருந்து செய்துகொள்ள முடியும். மேலும் ஒரு இடத்தில் கணக்கு தொடங்கிய தகவல்களை மற்ற தொடர்புடைய இடங்களில் அதைப்போன்றே தகவல்களை தானே எடுத்துக்கொள்கிறது. புதியவர்கள் கூட Accounting Software வாங்காமல் இந்த மென்பொருளைப் பயன்படுத்தி பயன்பெறலாம். மென்பொருளைத் தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவிப் பயன்படுத்திப் பாருங்கள். உண்மையிலேயே இந்த இலவச Accounting Software மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று நீங்களே சொல்வீர்கள்.. மென்பொருளைத் தரவிறக்க:

இங்கு கிளிக் செய்யுங்கள்

நன்றி அன்புடன்

No comments: