என்னால் முடிந்த நல்லவற்றை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு இந்த பிளாகரை ஆரம்பிக்கின்றேன். தொடர்புகளுக்கு Facebook-anokaran,மொபைல்0778705960

www.suruthy.blogspot.com

Thursday, November 19, 2015

விரைவில் 5G


தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் 5ஜி தகவல் தொடர்பின் மூலம் 1  டி.பி.பி.எஸ்., (1 Tbps) இன்டர்நெட் வேகத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். இங்கிலாந்தின் சுரே பல்கலைக்கழகத்தின்  5ஜி இன்னோவேசன் மையத்தை (5G Innovation Center) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 1 டி.பி.பி.எஸ்., அளவுக்கு இன்டர்நெட் வேகத்தை உயர்த்தும் புதிய முயற்சியை செய்து  அதில் வெற்றி கண்டுள்ளனர். இது தற்போதுள்ள வேகத்தை விட ஆயிரம் மடங்கு அதிகம். 

இந்த வேகத்தின் மூலம் ஒரு திரைப்படத்தை 3 நிமிடங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இது 4ஜி வேகத்தைவிட சுமார் 65,000 மடங்கு  வேகமானது. இதற்கு முன்பு அதிக வேகமாக சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின், 5ஜி இன்டர்நெட் வேகம் 7.5 ஜி.பி.பி.எஸ் என்ற அளவில்  இருந்தது. இந்த தொழில்நுட்பம் 2018ல் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று நம்பப்படுகிறது.

நன்றி அன்புடன்

No comments: