உங்களிடம் ஜாதகம் இருந்தால் அதில் உள்ள கட்டங்களின் கிரகங்களை சரிபாரப்பதற்கும் புதியதாக ஜாதகம் எழுதுவதாக இருந்தாலும் இந்த இணையதளம் உதவி செய்கின்றது. இந்த தளம் காண இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும்.
இதில் நீங்கள் பிறந்த ஊர் குறிப்பிடவும். தமிழ்நாடாக இருந்தால் நீங்கள் பிறந்த ஊருக்கு அருகில் உள்ள பெரிய நகரத்தை குறிப்பிடலாம். அல்லது உங்கள் ஊரின் சரியான அட்சரேகை,தீர்க்கரேகை தெரிந்தாலும் குறிப்பிடலாம்.அதுபோல நீங்கள் பிறந்த நேரத்தினை குறிப்பிட்டு இதில் உள்ள கால்குலேட் கிளிக் செய்யவும்.
சிலநொடிகளில் உங்கள் ராசி.நட்சத்திரம்.உங்கள் லக்னம்.மற்ற கிரக நிலைகள் ஆகிய விவரங்கள் வலதுபக்க விண்டோவில் கிடைக்கும்.
இடது பக்கம் உங்களுக்கான ஜாதக கட்டம் விரிவாக கிடைக்கும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் நமக்கு தேவையான விவரங்களை பிரிண்ட் கூட எடுத்துவைத்துக்கொள்ளலாம். இந்த தளம் ஏற்கனவே நாம் பதிவிட்டிருந்தாலும் நிறைய நண்பர்கள் இந்த வசதியை கவனிக்காமல் விட்டுவிட்டார்கள். அவர்களுக்கு நினைவுப்படுத்தவே இந்த பதிவு..பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்
நன்றி அன்புடன்
No comments:
Post a Comment