என்னால் முடிந்த நல்லவற்றை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு இந்த பிளாகரை ஆரம்பிக்கின்றேன். தொடர்புகளுக்கு Facebook-anokaran,மொபைல்0778705960

www.suruthy.blogspot.com

Thursday, April 14, 2011

பவர்பாயிண்ட் பைல்களை ப்ளாஷ் பைல்களாக கன்வெர்ட் செய்ய - authorPOINT Lite

பவர்பாயிண்ட் பைல்கள் பெரிதும் முக்கியமான ஆவணங்களை ஒருங்கிணைத்து காட்டுவதற்காக பயன்படுகிறது. மாணவர்களிடம் ஆசிரியர் விளக்க உரையினை வழங்கவும். கல்விசார்ந்த மற்றும் சாராத இடங்களில் கணினியின் மூலமாக சமூக பிரச்சினைகளை எடுத்துக்கூறும் போது அதனை பவர்பாயிண்ட் பைல்களாக காட்டுவோம்.
கருத்துகணிப்பு விவரங்களையும் பவர்பாயிண்ட் பைல்களாகவே உருவாக்குவோம். இந்த பைல்களை நாம் உரிய மென்பொருள் துணையுடன் மட்டுமே காண முடியும். இதுபோன்ற பைல்களை நாம் இணையத்தில் முழுமையாக வெளியிட இயலாது, இதனால் பல்வேறு சிக்கல்கள் எழும். இதுபோன்ற பிரச்சினைகள் எழாமல் இருக்க பவர்பாயின்ட் பைல்களை ப்ளாஷ் பைல்களாக கன்வெர்ட் செய்து பார்க்க முடியும். இணையத்தில் உலவும்  கணினி பயனாளர்கள் ப்ளாஷ் பைல்களை கண்டிருக்க முடியும். பவர்பாயிண்ட் பைல்களை, ப்ளாஷ் பைல்களாக கன்வெர்ட் செய்ய authorPOINT Lite என்ற மென்பொருள் உதவுகிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, டவுண்லோட் லிங்கை அழுத்தி, பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு  மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் Import என்னும் பொத்தானை அழுத்தவும். 


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் பவர்பாயிண் பைலை தேர்வு செய்யவும். தனியொரு பைலாக இருந்தாலும் சரி மொத்தமாக கோப்பறையாக இருப்பினும் பதிவேற்றம் செய்து கொள்ள முடியும். அடுத்து Import Now என்னும் பொத்தானை அழுத்தவும். சில மணிநேரங்களில் உங்களுடைய பவர்பாயிண்ட் பைலானது ப்ளாஷ் பைலாக கன்வெர்ட் செய்யப்பட்டுவிடும். 

கன்வெர்ட் செய்யப்பட்ட பைல்களை My Documents > authorGEN Projects என்ற கோப்பறையில் சென்று காண முடியும். இந்த வெளியீடு இடத்தை மாற்றம் செய்ய Tools > Option என்னும் வரிசையை தேர்வு செய்யவும். பின் Change என்ற பொத்தானை அழுத்தி வெளியீட்டு இடத்தை மாற்றிக்கொள்ள முடியும்.


இந்த மென்பொருளின் உதவியுடன் பவர்பாயிண்ட் பைல் பார்மெட்களான (.ppt, .pps,.pptx and .ppsx) லிருந்து ப்ளாஷ் (.swf) பைல் பார்மெட்டாக கன்வெர்ட் செய்துகொள்ள முடியும். இந்த வசதியினை பவர்பாயிண்டில் இருந்தபடியே பெற முடியும். பவர்பாயிண்டில் இருந்து ப்ளாஷ் பைலாக கன்வெர்ட் செய்துகொள்ள முடியும்.


இந்த மென்பொருளின் உதவியுடன் பவர்பாயிண்ட் பைல்களை ப்ளாஷ் பைல்களாக கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். ஆடியோ, இமேஜ் போன்றவற்றின் தரம் குறையாமல் இருக்கும். இந்த மென்பொருளில் இருந்து கன்வெர்ட் செய்யப்படும் பைல்கள் index.html என்று சேமிக்கப்பட்டு இருக்கும். அதனை உலவியின் துணைக்கொண்டு  பார்க்க முடியும்.
நன்றி
T.Ano

1 comment:

Anonymous said...

lunt louboutin xmtnw abercrombie france cnryd http://poloralphxlaurenmagasinns.webnode.fr/ e p p bi